ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஆர்யா?

ரஜினி நடித்த படங்களை ரீமேக் செய்வது, அவர் நடித்த படங்களின் தலைப்புகளை வைப்பது சமீபகாலமாக டிரெண்ட்டாகி வருகிறது. இதில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் வெற்றிகரமாக ஓடி வசூலையும் குவித்தது. அதன்பின் ரஜினி படங்களை ரீமேக் செய்த அனைவரும் ஓரளவே வெற்றி கண்டனர்.

இந்நிலையில், ஆர்யாவும் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். ரஜினி நடித்த ‘பாண்டியன்’ படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை சுராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யட்சன்’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘இஞ்சி இடுப்பழகி’ ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது. அதனால், ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தை ரீமேக் செய்து அதிலாவது வசூலை குவிக்கலாம் என நினைக்கிறார் ஆர்யா. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.

Related Posts