ரஜினி படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்!

தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளரானவர் அனிருத். அந்த படத்தில் இடம்பெற்ற ஒய்திஸ் கொலவெறி -என்ற பாடல் உலகமெங்கிலும் பிரபலமாகி அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

rajini-ani-ruth

அதையடுத்து எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மான்கராத்தே, கத்தி, வேதாளம் என பல படங்களில் சூப்பர் ஹிட பாடல்களை கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளரானார் அனிருத். அதனால் விரைவில் அவர் ரஜினி படத்திற்கும் இசையமைத்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரஜினி நடித்த கபாலி படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளரானார். இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் ரெமோ மற்றும் அஜீத் தின் 57-வது படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் இசையமைக்க விடாமுயற்சி செய்ததின் காரணமாக அவருக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியிருக்கிறதாம்.

அபபடத்தில் நாயகியாக அமலாபால் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியருக்கும் நிலையில், தற்போது அனிருத் இசையமைப்பதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

Related Posts