ரஜினி படத்தில் மலையாள வில்லன்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.ஓ’ படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் நாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.

rajini

இந்நிலையில், மற்றொரு வில்லனாக நடிக்க மலையாள நடிகர் கலாபவன் சாஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்ஷய்குமாருக்கு இணையான வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கலாபவன் சாஜன் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ஒப்பம்’, பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த ‘பாவடை’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது உக்ரைனில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்குள்ள ஒரு சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வருடத்தின் இறுதியில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

Related Posts