ரஜினி படத்திற்கான பாடல் ரெக்கார்டிங்கை தொடங்கிய சந்தோஷ் நாராயணன்!

டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். ஆனால், அதையடுத்து ரஜினி படத்தை ரஞ்சித் இயக்கப்போகிறார் என்றதும், சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டைரக்டர் ரஞ்சித் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை விடவில்லை. தங்கள் கூட்டணி வெற்றிகரமாக இருப்பதால் கபாலியிலும் அவரையே இசையமைக்க வைக்க விரும்பினார். அதற்கு ரஜினியும் சம்மதம் சொன்னார்.

அந்த வகையில் கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் அந்த படத்தில் நெருப்புடா என்ற சூப்பர் ஹிட் பாடலையும் கொடுத்தார். அது இப்போதுவரை ரசிகர்களின் விருப்ப பாடலாக இருந்து வருகிறது. இந்தநிலையில், அடுத்தபடியாக ரஜினியின் 161வது படத்தை இயக்கும் பா.ரஞ்சித், அந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணனையே இசையமைப்பாளராக்கியிருக்கிறார். இம்மாதம் இறுதியில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே பாடல்களுக்கு டியூன் அமைக்கும் வேலைகளை தொடங்கி விட்டார் சந்தோஷ்நாராயணன். அதன்காரணமாக சில பாடல்களின் கம்போஸிங் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதனால் சூட்டிங் செல்லும்போது, சில பாடல்களையும் கையோடு கொண்டு செல்கிறாராம் பா.ரஞ்சித்.

Related Posts