ரஜினி படக்கதையில் மும்முரமாக இருக்கும் பா.ரஞ்சித்!

ரஜினிகாந்தை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ள புதிய படத்தின் கதை விவாதத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சூப்பர் ஸ்டார் அறிவித்தார்.இதனை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும்,ரஞ்சித் இயக்கவுள்ள படத்தின் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கான கதையை இறுதி செய்யும் பணியில் ரஞ்சித் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் எனவும்,இதற்காக அவர் மும்பையில் தங்கியிருந்து இந்த பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.மீடியாக்களின் கவனத்திலிருந்து ஒதுங்கி இருப்பதற்காக ,அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷின் ஆலோசனையின் பேரில் ரஞ்சித் மும்பைக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கபாலி போல் இல்லாமல் முழுக்க கமர்ஷியல் படமாக இந்த படம் இருக்கும் எனவும் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts