ரஜினி தவறவிட்ட கதையில் அரவிந்த்சாமி

சரியான கதைகள் கிடைக்காமல் திண்டாடி வரும் தமிழ்ப்பட ஹீரோக்களின் பார்வை எப்போதும் பிற மொழிப்படங்கள் மீது இருக்கும். குறிப்பாக மலையாளத்திரைப்படங்கள் மீது. அங்கே வெற்றியடைந்த படங்களின் கதையை வாங்க போட்டிபோடுவார்கள். அந்தவகையில் மலையாளத்தில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் கதையை வாங்கவும் கடுபோட்டி இருந்தது..

சித்திக் இயக்கிய இப்படத்தில் மம்முட்டி, நயன்தாரா, ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் நைனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் படம் அங்கே மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. அதனால் அந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டினார்கள். ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் அடிபட்டன.

மலையாள ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை இயக்கிய சித்திக்கே தமிழிலும் இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. தமிழில் ஃப்ரண்ட்ஸ், எங்கள் அண்ணா, சாது மிரண்டா, காவலன் முதலான படங்களை இயக்கியவர் சித்திக் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அந்த செய்தி அடங்கிப்போனது. இந்நிலையில், மம்முட்டி நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் அரவிந்த்சாமி நடிக்கவிருக்கிறார். ‘போகன்’ படத்தையடுத்து தற்போது தமிழில் ‘சதுரங்கவேட்டை-2’ படத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமி, இப்படத்தில் நடித்து முடித்துவிட்டு பாஸ்கர் தி ராஸ்கல் ரீமேக்கின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

Related Posts