ரஜினி, கமல், சரத்குமார் படங்களுக்கு இலங்கையில் தடை?

rajini_kamalதென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களான சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சுப்ரிம் ஸ்டார் சரத்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய நடிகர்களின் திரைப்படங்களை இலங்கைக்கு கொள்வனவு செய்வதை நிறுத்த வேண்டும் என இராவணா சக்தி அமைப்பு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

குறித்த நடிகர்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, தென் இந்தியாவின் பிரபல திரை நட்சத்திரங்களான ரஜனிகாந்த், கமல்ஹாசன், விஜய், சரத்குமார் போன்ற நடிகர்கள் நடித்த திரைப்படங்களை இலங்கையில் இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென திரைப்படக்கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் குறித்த நடிகர்கள் நடித்த திரைப்படங்ளை இறக்குமதி செய்ய அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related Posts