தமிழ் திரையுலகையும், தமிழக அரசியலையும் என்றும் பிரிக்க முடியாது. இந்நிலையில் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களை அவதூறாக பேசி இலங்கை இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டதால் தமிழகமே கொதித்து போய் உள்ளது.
இதற்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் விதத்தில் தமிழ் திரையுலகத்தினர் இலங்கை தூதரகத்தை மூடக்கோரி போராட்டம் நடத்தினர். இதில் நடிகர்கள் விஜய், சூர்யா, ஜீவா மற்றும் இயக்குனர்களில் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ், பார்த்திபன், சீமான் போன்று பலர் கலந்து கொண்டனர்.
பெரிதும் எதிர்பார்த்த ரஜினிகாந்த் வராதது அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது, இதேபோல் கமலும் வரவில்லை, அஜித் பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனால் இதற்கு என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியாமலே இருந்து வருகிறது.
இது பற்றி நெருங்கிய வட்டாரங்களை விசாரித்தால் ரஜினி லிங்கா படத்திலும், கமல் உத்தம் வில்லன் படத்திலும் பிஸியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதே போல் சென்ற வருடம் இலங்கைக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவு தரும் நோக்கத்தில் தமிழ் திரையுலகம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.
இதில் அஜித் காலையிலிருந்து போராட்டம் முடியும் வரை கலந்து கொண்டார், ஆனால் நேற்றைய போராட்டத்தில் இவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை.
பெரும்பாலும் ஈழத்து மக்கள் பிரச்சனை என்றால் கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்வார்கள், ஆனால் இது தனி மனிதருக்கான நிகழ்வு என்பதால் தவிர்த்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.