ரஜினி எமி டூயட்டுக்கு உத்தர பிரதேச அரசு ஏற்பாடு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் 2.ஓ. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்புகள் இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ரஜினி, எமி ஜாக்சன் தொடர்பான ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ அருகில் உள்ள கோம்தி நதி, ஜானேஸ்வர் மிஸ்ரா பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது.

இதற்காக ஷங்கர் தன் உதவியாளர்களுடன் சென்று லொக்கேஷன் பார்த்து திரும்பி உள்ளார்.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில திரைப்பட மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் கவுரவ் திரிவேதி கூறியிருப்பதாவது:

இந்தியாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கள் மாநிலத்தில் வந்து நடிப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. தென்னிந்திய சினிமாக்களை ஈர்க்க வேண்டும் என்கிற எங்கள் முதல்வரின் கொள்கைக்கு இது வலு சேர்ப்பதாக இருக்கிறது. படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். படப்பிடிப்புக்கு தேவையான அத்தனை உதவிகளையும் முன்னின்று செய்து கொடுப்போம். என்கிறார் திரிவேதி.

Related Posts