ரஜினி உடல் நிலை பற்றி வதந்தி பரப்பிய இலங்கை இணையத்தளம் மீது சைபர் க்ரைமில் புகார்

ரஜினி உடல் நிலைப் பற்றி வதந்தி பரப்பிய நபர் மீது நடவடிக்கை கோரி சைபர் க்ரைம் அலுவலகத்தில் இன்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இலங்கையைச் சேர்ந்த தமிழ் இணையதளம் ஒன்று ரஜினி உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியது.

இதைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப், ட்விட்டர் போன்றவற்றில் அந்த வதந்தி தீயாகப் பரவியது. ரஜினி ரசிகர்கள், பொதுமக்கள் இது குறித்து கேட்டுக் கொண்டே இருந்ததால் அந்த வதந்தி மேலும் பரவ ஆரம்பித்ததது.

தமிழ் செய்தி சேனல்களும் இந்த வதந்தி குறித்த செய்திகளை ஒளிபரப்ப ஆரம்பித்தன. இந்த வந்திகளை ரஜினியின் குடும்பத்தினர் மறுத்து, ரஜினி நலமுடன் இருப்பதாகவும், அடுத்த வாரம் சென்னை திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.

மேலும் இந்த வதந்தியைப் பரப்பிய நபர் மீது சைபர் க்ரைம் பிரிவில் புகார் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related Posts