ரஜினி அஜித் இணையும் எந்திரன் II ?

ஷங்கரின் அடுத்த படம் எந்திரன் 2 என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக உருவாக்கப்பட்ட இந்த திரைக்கதையில் ரஜினி தன்னுடைய உடல்நலம் கருதி இந்த படத்தில் நடிக்கமுடியாது என்று கூறிவிட்டார்.

rajini-ajith

லிங்காவில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டபோதே தன்னுடைய உடலை பாதிக்காதவாறு ரிஸ்க்கான காட்சிகள் வேண்டாம் என்ற கோரிக்கையோடுதான் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் எந்திரன் 2 படத்தை அஜீத்தை வைத்து எடுக்க முடிவு செய்திருக்கும் ஷங்கர், இதில் ஒருசில காட்சிகளில் ரஜினி நடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ரோபோவாக வரும் கேரக்டரில் ரஜினியை தவிர வேறு யார் நடித்தாலும் எடுபடாது என்பதால் ரஜினியை வைத்து ஒருசில காட்சிகள் எடுத்துவிட்டு மற்ற காட்சிகளை டூப் அல்லது மொஷன் கேப்ட்சரிங் முறையில் படத்தை முடிக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு ரஜினி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது ஒருவேளை நடந்தால் அஜீத்தும், ரஜினியும் மோதும் காட்சிகள் இருக்கும் என்றும், கிராபிக்ஸில் உருவாகும் அந்த காட்சிகளில் அனல் பறக்கும் என்றும் கூறப்படுகிறது. இரு நடிகர்களின் ரசிகர்களும் இந்த படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்துள்ளனர்

Related Posts