ரஜினியை சிரிக்க வைக்கும் சந்தானம்!

சினிமாவில் ஒரு ஹீரோயின் எப்படி ரஜினியுடன் நடிப்பது அத்தனை எளிதில் நடக்காதோ, அதேபோல்தான் ஒரு காமெடியன் அவரை நெருங்குவதும் கடினமான விசயம். ஆனால் சந்தானத்துக்கு அந்த வாய்ப்பு எந்திரன் படத்தில் எளிதில் கிடைத்து விட்டது.

rajini-santhanam

காரணம், அதுவரை ரஜினியுடன் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, போன்ற நடிகர்களின் மார்க்கெட் சரிந்து விட்டதால், ரஜினியே இதுகாலத்தின் கட்டாயம் என்பதுபோல் சந்தானத்தை எந்திரன் படத்தின் முக்கிய காமெடியனாக்கினார். கூடவே கருணாசும் நடித்திருந்தார்.

இந்தநிலையில், தற்போது லிங்கா படத்திலும் ரஜினியுடன் படம் முழுக்க வரும் காமெடியனாக வந்து கலகலப்பாக்கிக் கொண்டிருக்கிறாராம் சந்தானம். அதோடு மட்டுமின்றி, ஸ்பாட்டில் ரஜினி ஓய்வாக இருக்கும் நேரங்களில் அவரது கேரவனுக்குள் புகுந்து ஏதாவது விசயங்களை ஜாலியாக பேசி அவரையும் சிரிக்க வைத்து வருகிறாராம்.

இதனால் கொஞ்சம் நேரம் சந்தானத்தை காணவில்லை என்றால், சந்தானத்தை எங்கே காணல? என்று ரஜினியே கேட்கிற அளவுக்கு அவர் மனதில் இடம் பிடித்து விட்டாராம் சந்தானம்.

அதோடு, லிங்காவில் ரஜினி இப்போதைய யூத் ஹீரோக்களைப் போன்று ஜீன்ஸ்-டீசர்ட் என்று அணிந்து கலக்குவதால், உங்களுடன் நடிப்பது எனக்கு ஒரு பெரிய ஹீரோவுடன் நடிப்பது போன்ற பீலே இல்லை. சிம்பு, ஆர்யா, விஷால் போன்ற இளவட்ட நடிகர்களுடன் நடிப்பது போன்றுதான் இருக்கிறது என்றும் சொல்லி, ரஜினியையும் யூத் மனநிலைககு மாற்றுகிறாராம் சந்தானம்.

Related Posts