ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்

இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர, பி.வாசு இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சிவலிங்கா’ படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரஜினியை வைத்து ‘சந்திரமுகி-2’ படமாக எடுக்க பி.வாசு திட்டமிட்டிருந்தார். ஆனால், ரஜினி தொடர்ந்து பிசியாக இருப்பதால் ராகவா லாரன்ஸை நடிக்க வைத்துள்ளார்.

raghava-lawrence-rajin

இப்படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பி.வாசு இயக்கத்தில் ‘சிவலிங்கா’ படத்தில் தான் நடிப்பது பற்றி கூறி அவரிடம் வாழ்த்துப் பெற்றார். மேலும், ராகவா லாரன்ஸ் தனது தயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவது பற்றியும் அவரிடம் பேசினார்.

அப்போது அது சம்பந்தமான புகைப்படங்களையும் ரஜினியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். தற்போது கோயில் கட்டும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் லாரன்ஸ் அவரிடம் தெரிவித்தார். அனைத்துக்கும் சேர்த்து ரஜினி அவருக்கு வாழ்த்துக்கூறி அனுப்பி வைத்தார்.

Related Posts