ரஜினியும், அக்ஷய்குமாரும் டில்லியில் மோதுகிறார்கள்

கடந்த சில வாரங்களாக சென்னை புறநகரில் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்தது. இதில் ரஜினியும், அக்ஷய்குமாரும் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டது. சென்னை ரோடுகளில் ராணுவ பீரங்கிகள் அணிவகுத்து வருவது போன்ற காட்சிகளை இன்னொரு யூனிட் படம் பிடித்தது.

rajini-aksai-kumar

இந்த நிலையில் 2.ஓ படப்பிடிப்புக்காக டில்லியில் ஒரு பிரமாண்ட மைதானத்தை வாடகைக்கு பிடித்து அங்கு கிரீன்மேட் ஷெட் போடப்பட்டுள்ளது.

அந்த ஷெட்டில் ரஜினி, அக்ஷய்குமார் மோதும் சண்டை காட்சிகள் இன்று முதல் படமாக்கப்படுகிறது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினார் டில்லி சென்றுள்ளனர்.

டில்லியில் 40 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கும் என்ற தெரிகிறது. 2.ஓ படம் 3டி தொழில்நுட்பத்திலும் தயாராவதால் ஒரு நாள் படப்பிடிப்புக்கு சுமார் 10 நவீன கேமரா வரை பயன்படுத்தப்படுகிறது.

3டி தொழில்நுட்பத்தோடு மட்டும் அல்லாமல் படப்பிடிப்பையே 3டி தொழில்நுட்ப லைட்டிங்கில் ஒளிப்பதிவு செய்கிறார்கள். இதனால் ஒரு ஷாட் எடுக்க ஒரு நாளும், ஒரு காட்சி எடுக்க 3 முதல் 4 நாட்கள் ஆகும் என்கிறார்கள். 2.ஓவை லைக்கா நிறுவனம் 360 கோடி ரூபாயில் தயாரிக்கிறது.

Related Posts