ரஜினியுடன் 2.ஓ-வில் நடிக்காதது ஏன்.? -கமல்

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரஜினி – ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 2.ஓ. எந்திரன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் அக்ஷ்ய், எமிஜாக்சன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து வருகிறது. இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் என்ற பெருமையோடு 2.ஓ உருவாகி வருகிறது.

முன்னதாக 2.ஓ படத்தில் பவர்புல் ரோலான வில்லன் வேடமான அக்ஷ்ய் குமார் ரோலில் நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் அவர் கேட்ட சம்பளம் ஒத்துவராததால் அடுத்தப்படியாக நடிகர் கமல்ஹாசனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. ஏற்கனவே கமலும், ரஜினியும் ஆரம்பகாலங்களில் இணைந்து நடித்துள்ளதால் அதை கருத்தில் கொண்டு இவர்களை இணைக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் கமல் மறுத்துவிட்டார்.

இதனிடையே 2.ஓ படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை நடிகர் கமல்ஹாசன் தற்போது தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது… எனக்கும், ரஜினிக்கும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தம் காரணமாகவே நான் 2.ஓ படத்தில் நடிக்கவில்லை. வில்லன் வேடம் என்பதால் 2.ஓ படத்தில் நடிக்க மறுக்கவில்லை. ஏற்கனவே நாங்கள் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். நான் ஹீரோவாகவும், ரஜினி வில்லனாகவும், ரஜினி ஹீரோவாகவும், நான் கெஸ்ட்ரோலிலும் நடித்தவர்கள் தான் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Posts