ரஜினியுடன் முன்னாள் கதாநாயகிகள் மீனா– ஸ்ரீப்ரியா சந்திப்பு

மீனாவும், ஸ்ரீப்ரியாவும் ரஜினி ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளனர். ‘முத்து’ படம் ரஜினி, மீனா நடிப்பில் வந்து வெற்றிகரமாக ஓடியது. ஜப்பானியர்களையும் ரஜினி ரசிகர்களாக மாற வைத்தது.

rajini-meena-sri-piriya

ரஜினியும் ஸ்ரீப்ரியாவும் நடித்த படங்கள் வசூல் குவித்தது. முன்னாள் கதாநாயகிகள் பலர் ரஜினி படங்களில் அம்மா, அக்காள், அண்ணி வேடங்களில் நடிக்கிறார்கள். ஆனால் மீனா, ஸ்ரீப்ரியா மட்டும் நடிக்கவில்லை.

சமீபத்தில் மலையாளத்தில் ஹிட்டான திரிஷ்யம் படத்தை ஸ்ரீப்ரியா தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கினார். இதில் வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடித்தனர்.

இந்த நிலையில் மீனாவும், ஸ்ரீப்ரியாவும் திடீரென ‘லிங்கா’ படப்பிடிப்பு நடந்த அரங்குக்கு சென்றனர். அங்கு ரஜினியை சந்தித்தார்கள். இருவரையும் ரஜினி வரவேற்றார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார். நீண்ட நேரம் ரஜினியிடம் பேசிக் கொண்டருந்த இருவரும் பின்னர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.

Related Posts