ரஜினியுடன் இணைந்து அரசியலில் பணியாற்றத் தயார் : கமல்

ரஜினிகாந்த அரசியலுக்கு வந்தால், அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த அறிவிப்பை விடுத்ததாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மக்கள் விரும்பினால் தாம் அரசியலுக்கு வரத் தயார் என்றும், அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அத்துடன், ரஜினி விரும்பினால் அணியில் இணைத்துக் கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தாம் தொழிலுக்காக நடிப்பதாகவும், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Related Posts