ரஜினியின் 40வது ஆண்டை கொண்டாடிய லிங்கா படக்குழுவினர்

நடிகர் ரஜினி திரையுலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதை, லிங்கா படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். 1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் மூலம் நடிகராக அறிமுகமான ரஜினி, உலக அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

 

 

rajini-40-2

தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தின் இறுதிக்கட்ட பிடிப்பு ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில், லிங்கா படக்குழுவினர் பிரத்யேகமாக ஆர்டர் செய்த கேக்கை ரஜினி வெட்டினார்.

 

rajini-40-1

அனைவருக்கும் கேக் வழங்கிய ரஜினியுடன், படக்குழுவினர் போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர்.

அப்போது, லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கூறுகையில், ஒரு மிகப் பெரிய பாசை போன்று 40 வருடங்களாக மக்களை மகிழ்வித்துள்ளார்.

 

rajini-40-3

இந்த கொண்டாட்டத்தில் நானும் பங்கேற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினி சாருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

ரஜினி திரையுலகிற்கு வந்த 40 வது ஆண்டை அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டு தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

Related Posts