ரஜினியின் 2.0 படப்பிடிப்பு நடந்த இடத்தில் விஸ்வரூபம் 2!

வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்த விஸ்வரூபம் 2 படம் விரைவில் வெளியாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் அறிகுறியாக, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார் கமல்.

விஸ்வரூபம் வெளியான உடனே, விஸ்வரூபம் 2 படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். விஸ்வரூபம் 2 படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஏற்கனவே எடுக்கப்பட்டு எடிட்டிங்கில் வெட்டி எறிய வேண்டிய காட்சிகளை வைத்து இரண்டாம் பாகம் என்ற பெயரில் என்னிடம் 30 கோடியை வாங்க நினைக்கிறார் என்று கமல் மீது குற்றம்சாட்டினார் ஆஸ்கார் ரவி.
அதனால், படத்திற்கான பணிகள் தாமதம் ஆகி ஒரு கட்டத்தில் படம் ட்ராப்பானது. இந்நிலையில் தற்போது ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து விஸ்வரூபம் 2 படத்தின் உரிமையைப் திரும்ப பெற்றார் கமல்ஹாசன்.

அடுத்தகட்டமாக, படத்தின் டப்பிங் மற்றும் இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையல் இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. இதில் சில முக்கிய காட்சிகளை சென்னையிலுள்ள ராணுவ பயிற்சி முகாமுக்குள் படமாக்க கமலுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கு முன் 2.0 படத்தின் படப்பிடிப்பு மட்டுமே இங்கு நடைபெற்றுள்ளது. சென்னை ராணுவ பயிற்சி முகாமில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கிராபிக்ஸ் தொடர்பான காட்சிகளை ஸ்டூடியோவில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Posts