ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் பிரபு, ஏ.ஆர்.ரஹ்மான் நடிக்கிறார்களா?

ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் ‘லிங்கா’ திரைப்படத்தில் இளையதிலகம் பிரபு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

rajini-pirabu

ரஜினியுடன் தர்மத்தின் தலைவன், குருசிஷ்யன், சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபு, மீண்டும் லிங்கா படத்தில் இணைகின்றார். லிங்கா படத்தில் மிக முக்கிய கேரக்டர் ஒன்றில் பிரபுவை நடிக்க கே.எஸ்.ரவிகுமார் முடிவு செய்து தற்போது அவருடைய காட்சிகளை ஐதராபாத்தில் படமாக்கி வருகிறார். பிரபுவுக்கு என்ன கேரக்டர் என்று படக்குழுவினர்களுக்கே தெரியாத வகையில் இதுவரையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த கேரக்டரில் முதலில் கார்த்திக் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் ரஜினியின் பரிந்துரை காரணமாக இந்த கேரக்டர் பிரபுவிற்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, ஜெகபதி பாபு, ராதாரவி, விஜயகுமார், மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், வடிவேலு ஆகிய முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த கூட்டத்தில் தற்போது பிரபுவும் ஐக்கியமாகி உள்ளார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரு காட்சியில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர்களிடையே கூறப்படுகிறது. ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான அலியா பட் நடித்த ‘ஹை வே’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts