ரஜினியின் பாராட்டு மழையில் நெகிழ்ந்து போன கபாலி டீம்!

ரஜினி இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ள படம் கபாலி. மெட்ராஸ் ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது ரஜினி இருக்கும் ஏரியா பக்கமே மற்ற நடிகர் நடிகைகள் செல்லத் தயங்கினார்களாம். அப்படியே ரஜினியிடம் பேசினாலும், தள்ளி நின்று பேசி விட்டு நழுவி விடுவார்களாம். இதற்கு காரணம், சீனியர், ஜூனியர் என்கிற பாகுபாடுதான் என்பதை புரிந்து கொண்ட ரஜினி, பின்னர் அப்படத்தில் நடித்த தினேஷ், கலையரசன், மைம்கோபி உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளிடமும் சகஜமாக பேசிப்பழகினாராம்.

rajini-kabali

முக்கியமாக, அவர்கள் நடிக்கும் காட்சிகளைப்பார்த்து விட்டு மனதார பாராட்டினாராம். அவரது இந்த பாராட்டில் நெகிழ்ந்து போன நடிகர்கள், அதன்பிறகுதான் மெல்ல மெல்ல ரஜினியிடம் நெருங்கி பழகினார்களாம். மேலும், தினமும் படப்பிடிப்புக்கு வந்ததும் அனைவருக்கும் வணக்கம் சொல்லும் ரஜினி, போகும்போதும் கடைசி டெக்னீசியன் வரை நன்றி சொல்லிவிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். அதுமட்டுமின்றி, காலையில் ஸ்பாட்டுக்கு என்ட்ரியானபோது இருக்கும் அதே எனர்ஜி மாலையில் வீடு திரும்புவது வரை ரஜினியிடம் இருந்ததாம். அந்த அளவுக்கு கபாலி கதாபாத்திரமாகவே ஸ்பாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாராம் ரஜினி.

Related Posts