ரஜினியின் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்

கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ஆம் தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் துவங்கவிருக்கிறது.

படத்திற்கு பூஜை போடப்படும் அன்று பப்ளிசிட்டி செய்வதற்காக ரஜினி- 161 படத்திற்கான ரஜினி சம்பந்தப்பட்ட ஃபோட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது.

பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் இப்படத்தின் கதை மும்பை தாராவி பகுதியில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதால் மும்பை தாராவி பகுதியை செட்டாக அமைத்துள்ளனர்.

இந்நிலையில் ரஜினி- 161 படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இடம்பெற உள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. Life of Pi படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவரும், சமீபத்தில் வெளியான பாகுபலி-2 படத்தில் VFX தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றியவருமான பெட்டா டிராப்பர் இந்த படத்தில் VFX வேலைகளை செய்யவிருக்கிறார்.

ஆஸ்கார் விருது பெற்ற கலைஞரை கமிட் பண்ணி இருக்கிறார்கள் என்றால் ரஜினி- 161 படத்தின் காட்சிகள் பிரம்மாண்டமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தகவல்கள் ரஜினியின் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

Related Posts