ரஜினியின் படத்தலைப்பை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரது படத்திலும் ரஜினியை முன்னிலைப்படுத்தி
பல காட்சிகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இந்நிலையில், ரஜினி நடிப்பில் கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் `வேலைக்காரன்’. மாபெரும் வெற்றி பெற்ற `வேலைக்காரன்’ படத்தலைப்பையே மோகன் ராஜா தனது அடுத்த படத்திற்காக கைப்பற்றியுள்ளார்.

இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பஹத் பாசில், சினேகா, ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சதிஷ், ரோபோ சங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் `வேலைக்காரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அஜித் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி படத்தை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts