ரஜினியின் குரலில், ஐஸ்வர்யா இயக்கும் சினிமா வீரன்

வை ராஜா வை படத்திற்குப் பிறகு ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் எந்தப் புதுப் படத்தையும் இயக்கவில்லை.

isvarya-danush-rajini

கடந்த கோடையன்று வெளிவந்த அந்தப் படத்திற்குப் பிறகு இன்றுதான் தன்னுடைய அடுத்த படைப்பைப் பற்றி ஐஸ்வர்யா தனுஷ் அறிவித்துள்ளார்.

சினிமா வீரன் என தலைப்பிடப்பட்டுள்ள ஒரு டாகுமென்டரி படத்தைத்தான் அவர் இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில் தமிழ் சினிமாவில் தங்களது ஸ்டன்ட் காட்சிகளால் கலக்கிய கலைஞர்களையும், நடிகர்களையும் பற்றி சொல்ல உள்ளாராம்.

இந்த டாகுமென்டரிக்கு ரஜினிகாந்த் பின்னணிக் குரல் கொடுக்க, ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கல்லூரியின் குதுப் இ கிரிபா இசைக் குழுவினர் இசையமைக்க உள்ளார்கள்.

இது பற்றி ஏ.ஆர். ரகுமானும் அவரது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக குறும் படங்களுக்கு அதிகப்படியான வரவேற்பு இருந்து வருகிறது. அதிலிருந்து பலர் பெரிய திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், டாகுமென்டரிப் படங்கள் தமிழில் குறைவாகவே வந்து கொண்டிருக்கின்றன. அந்தக் குறையை சினிமா வீரன் போக்கும் என எதிர்பார்க்கலாம். அதற்கு ரஜினி வாய்ஸ்-ம் முக்கியக் காரணமாக அமையும்.

Related Posts