ரஜினிக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கி உள்ளது. இது தொடர்பாக மீடியாக்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்காணி, தேர்தல் விழிப்புணர்வு படத்தில் நடிக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருப்பதாக கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். பணம் வாங்காமல் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர், நடிகைகளை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கடந்த தேர்தலின்போது நடிகர் நடிககைகள் விழிப்புணர்வு படங்களில் நடித்துக் கொடுத்தார்கள். அதே போன்று இந்த தேர்தலுக்கு கார்த்தி, சூர்யா நடித்துக் கொடுத்துள்ளனர். அது விரைவில் வெளியிடப்படுகிறது.

நயன்தாரா நடித்து தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ரஜினியிடம் விழிப்புணர்வு படத்தில் நடித்து தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் யாரும் பணம் வாங்குவதில்லை. ஆனாலும் ஒரு படத்துக்கு படப்பிடிப்பு செலவுக்கு தேர்தல் கமிஷனர் 50 ஆயிரம் வரை செலவு செய்கிறது என்றார் ராஜேஷ் லக்காணி.

Related Posts