ரஜினிக்கு என்ன ஆச்சு: காலமானதாக வெளியாகும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்!

தமிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அவர் நலமாக இருக்கிறார்.

rajini

இலங்கையைச் சேர்ந்த தமிழ் சினிமா இணையத்தளம் ஒன்று இன்று காலை ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியானது. அது, அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் மாரடைப்பால் காலமானார் என்றும், இத் தகவலை அவருடைய மகள் சௌந்தர்யா உறுதி செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நம்முடைய தரப்பில் விசாரித்தபோது, அந்தத் தகவல் பொய்யானது என்றும், ரஜினிகாந்த் நலமாக உள்ளதாகவும் தெரிகிறது.

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் இறந்து போனதாக ஃபேஸ்முக், டுவிட்டர் போன்ற சமூக வளைத் தளங்களில் வதந்திகள் பரவுவதும், அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்து அறிக்கை விடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடித்து ரஞ்சித் இயக்கியுள்ள கபாலி படம் விரைவில் வெளியாக உள்ளது. அத்துடன், இயக்குநர் சங்கர் தயாரிப்பில் எந்திரன் 2.0 படத்தின் இறுதிக் கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சங்கர் படத்துக்காகவே ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்த நிலையில்தான், அவர் மாரடைப்பால் காலமானார் என்ற உறுதிப்படுத்தப்படாத அதிர்ச்சித் தகவல் வெளியாகி ரஜினி ரசிகர்களை கவலைகொள்ள வைத்துள்ளது.

Related Posts