ரஜினிக்கு அழைப்பு விடுத்த கிரண் பேடி

தற்போது புதுச்சேரியில் கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பவர் கிரண்பேடி. ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கு, அரசியல்வாதி, சமூக சேவகர் என பலமுகம் உண்டு. அதோடு, திகார் சிறையில் ஆய்வாளராக இருந்தபோது இவர் செய்த சீர்திருத்தங்கள் அவருக்கு விருது பெற்றுக்கொடுத்தது. தற்போதைய பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இவரே ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

rajini-kiran-bedi

இந்நிலையில், தற்போது புதுச்சேரியின் கவர்னராகியிருக்கும் கிரண்பேடி, வந்த வேகத்திலேயே அந்த மாநிலத்தை தூய்மையானதாக மாற்றும் பணியில் இறங்கியிருக்கிறார். அதன்ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் புதுச்சேரி அம்பாசிடராக ரஜினி பணியாற்ற வேண்டும் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Posts