ரஜினிக்காக இயக்குனர் சிவாவின் திட்டத்தையே மாற்றிய அஜீத்?

‘தல 57’ படத்தின் ஷூட்டிங் ரஜினிக்காக சென்னைக்கு பதில் ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் ஏஜெண்டாக நடித்து வரும் படம் ‘தல 57’. முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று கூறப்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்பும் தல 57 படப்பிடிப்பை நடத்த திட்டமிட்பட்ட பிலிம் சிட்டியில் நடத்த உள்ளார்கள் என்பது அஜீத்துக்கு தெரிய வந்தது.

இருவரின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடந்தால் இருவருக்குமே பிரைவசி இருக்காது என்று நினைத்த அஜீத் தனது படத்தின் படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்றுமாறு சிவாவிடம் தெரிவித்தாராம்.

இதையடுத்து அஜீத் படத்தின் படப்பிடிப்பை சிவா ஹைதராபாத்திற்கு மாற்றியதாக கூறப்படுகிறது. தல 57 படக்குழு அடுத்த வாரம் ஹைதராபாத்தில் வேலையை துவங்குகிறது.

Related Posts