ரஜினிகாந்தைப்போல் யாரையும் பார்க்கமுடியாது’’ ராதிகா ஆப்தே

‘ரஜினிகாந்தைப்போல் யாரையும் பார்க்க முடியாது. அவர் எனக்கு பிடித்த அற்புதமான மனிதர்’’ என்று நடிகை ராதிகா ஆப்தே கூறினார்.

‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

rathika-apththey

இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ராதிகா ஆப்தே கூறியதாவது:-

‘‘ரஜினிகாந்துடன் நடிப்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் சேர்ந்து நடிப்பது யாருக்குத்தான் சந்தோஷமாக இருக்காது?. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளுமே மகிழ்ச்சியாக இருந்தது.

என் வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த அனுபவமாக இதை கருதுகிறேன். ரஜினிகாந்திடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அவர் எனக்கு பிடித்த ஒரு அற்புதமான மனிதர்.

ரஜினிகாந்தை போல் யாரையும் பார்க்க முடியாது. மலேசியாவில் இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்தது. இதற்காக படப்பிடிப்பு குழுவினர் பல நாட்கள் அங்கு முகாமிட்டு இருந்தோம். படப்பிடிப்பை சிறப்பாக நடத்தினார்கள். அங்கு அதிக வெயில் இருந்தது. இதனால் கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது. தற்போது இதன் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து குரல் பதிவையும் முடித்து விட்டோம்.

கபாலி விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து ‘போபியா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறேன். வீட்டை விட்டு வெளியே செல்ல பயப்படும் ஒரு பெண்ணைப்பற்றிய கதை. அந்த வீட்டுக்குள் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதனால் அந்த பெண் படும் அவஸ்தைகள் திரைக்கதையாக்கப்பட்டு உள்ளது. இதில் மனநிலை பாதித்த பெண் வேடத்தில் நான் வருகிறேன்.

சைக்கலாஜிக்கல் திகில் படமாக தயாராகிறது. கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். இதில் எனது கதாபாத்திரம் பேசப்படும்.’’

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

Related Posts