ரசூல் பூக்குட்டியை அசரடித்த ரஜினிகாந்த்!

ஒரே நாளில் மூன்று ரீல்களுக்கு டப்பிங் பேசி ரசூல் பூக்குட்டியை அசத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் 2.0 படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந்த படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகளுக்கு பத்து மாதம் பிடிக்கும் என்பதால்,இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் வேலையை முடித்துவிட இயக்குநர் ஷங்கர் முடிவெடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது காட்சிகளுக்கான டப்பிங் வேலைகளை துவங்கியுள்ளார்.2.0 படத்திற்காக டப்பிங் வேலைகளை ஆஸ்கர் விருது பெற்ற இசைக் கோர்வையாளர் ரசூல் பூக்குட்டி ஒருங்கிணைக்கிறார்.

நேற்று நடந்த முதல் நாள் டப்பிங்கில் மூன்று ரீல்களுக்கு டப்பிங் பேசி ரசூல் பூக்குட்டியை அசர வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.பொதுவாக 3 ரீல்களுக்கு டப்பிங் பேச குறைந்தது ஐந்து நாட்களாவது ஆகும்.ஆனால் அதனை ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் முடித்திருப்பதை ரசூல் பூக்குட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

“தலைவரின் அர்பணிப்பு உணர்வு யாராலும் ஈடு செய்ய முடியாதது.ஒரே நாளில் மூன்று ரீல்களுக்கான வேலை முடிந்தது.அவர் வேலை செய்யும் விதத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.”என ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார்.

Related Posts