ரசிகர்கள் வரிகளில் மீண்டும் உருவாகும் ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

ஏ.ஆர்.ரகுமானின் சூப்பர் ஹிட் பாடலான “டேக் இட் ஈசி ஊர்வசி” பாடல் ரசிகர்களின் பாடல் வரிகளுக்கேற்ப மீண்டும் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம்,’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடலை இந்த காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க பாடல் வரிகளை பரிந்துரைக்குமாறு ஏ.ஆர்.ரகுமான் தனது ரசிகர்களிடம் கேட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்,தற்போதைய சூழலில் ஊர்வசி பாடல் எப்படி இருக்க வேண்டும் என தங்கள் கற்பனை குதிரையை தட்டி விட்டனர்.

ரசிகர்கள் அனுப்பிய ஆயிரக்கணக்கான வரிகளில்,தனக்குப் பிடித்த நான்கு வரிகளை ஏ.ஆர்.ரகுமான் தேர்ந்தெடுத்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

”பெல்டு போட்டும் வேட்டி அவுந்தா…டேக் இட் ஈசி பாலிஸி..

ஹெல்மெட் போட்டும் மாமா பிடிச்சா…டேக் இட் ஈசி பாலிஸி..

கடலை நடுவுல பேட்டரி தீர்ந்தா…டேக் இட் ஈசி பாலிஸி..

கிழிஞ்ச பேண்ட பேஷன்னு சொன்னா..டேக் இட் ஈசி பாலிஸி..”

என்ற இந்த நான்கு வரிகளை இசைப்புயல் தேர்ந்தெடுத்துள்ளார்.

Related Posts