ரசிகர்களை நெகிழவைத்த டேவிட் வோர்னர்

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள 4 ஆவது டெஸ்ட் போட்டியில் அரங்கத்தை நெகிழவைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

202541

4 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடி வருகின்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக துடுப்பெடுத்தாடிவரும் டேவிட் வோர்னர் 63 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்த அணியின் முன்னாள் வீரர் பில் ஹியூசை நினைவு கூறும் முகமாக மைதானத்துக்கு முத்தமிட்டமையே அச்சம்பவமாகும்.

கடந்த மாதம் முற்பகுதியில் பில் ஹியூஸ் அதே மைதானத்தில் 63 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் பவுன்சர் பந்தில் காயமடைந்து கீழே விழுந்த அதே இடத்தை வோர்னர் முத்தமிட்டமை போட்டியைக் காண வந்திருந்தோரின் மனதை கலங்க வைத்த சம்பவமாக அமைந்தது.

அவுஸ்திரேலிய அணி தற்பொழுது 79.2 ஒவர்கள் நிறைவில் 315 ஒட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது. டேவிட் வோர்னர் 101 ஒட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

CRICKET-AUS-IND

Australia v India - 4th Test: Day 1

Warnerkiss

Related Posts