நாளுக்கு நாள் விஜய், அஜீத் ரசிகர்களின் தொல்லை இணையதளங்களில் அதிகமாகிக் கொண்டே வருகிறது.விஜய்யை பற்றி நல்லதாக செய்திகள் வெளியிட்டால் அஜித் ரசிகர்களும், அஜித்தை பற்றி நல்லதாக செய்திகள் வெளியிட்டால் விஜய் ரசிகர்களும், ஊடகங்களின் இணையப்பக்கங்களில் மாறி மாறி கேவலமான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.
அப்படி அஜீத், விஜய் ரசிகர்களின் வலையில் சமீபத்தில் குஷ்பு மற்றும் பாடகி சின்மயி இருவரும் சிக்கி தவித்துள்ளனர்.
தற்போது இந்த விஷயத்தை குஷ்பு விஜய்யிடம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் விஜய்யும் கோபமடைந்து, ரசிகர்கள் இனிமேல் வரம்பு மீறி நடந்து கொண்டால், ரசிகர் மன்றங்கள் கலைக்கப்படும் என அனைத்து ரசிகர் மன்றத்திற்கும் உத்தரவிடுமாறு கூறியுள்ளாராம்.