ரசிகர்களுக்கு ராகவா லாரன்சின் கிறிஸ்துமஸ் விருந்து!

காஞ்சனா-2 படத்தை கடந்த ஆண்டு வெளியிட்ட ராகவா லாரன்ஸ், அதை யடுத்து சாய் ரமணி இயக்கத்தில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வந்தார். நிக்கி கல்ராணி நாயகியாக நடித்து வந்த இந்த படத்தை 2016-ம் ஆண்டு திரைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான் லாரன்சின் டார்கெட்டாக இருந்தது.

ஆனால், அந்த படத்தை விநியோகம் செய்ய இருந்த வேந்தர் மூவீஸ் மதன், முன்கூட்டியே ஏரியாவாரியாக பணத்தை வாங்கிக்கொண்டு திடீரென்று காணாமல் போனதால் அப்படம் திட்டமிட்டபடி நடக்காமல் கடைசி கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்த ஆண்டு லாரன்ஸ் நடிப்பில் ஒரு படம் கூட வெளிவரவில்லை.

அதையடுத்து, மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியாவதில் பிரச்சினை என்றதும் உடனடியாக பி.வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் நடித்தார் லாரன்ஸ்.

அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. இப்படம் ஜனவரி மாதம் வெளியாகிறது.

இந்த நேரத்தில் தனது ரசிகர்களை கருத்தில் கொண்டு டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் தினத்தின்று சிவலிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார் லாரன்ஸ். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Related Posts