ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த சங்கா: இலங்கை தடுமாற்றம்!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்து மற்றும் சுழல்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்களுக்கு பாரிய நெருக்கடியை கொடுத்துள்ளனர்.

காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவரும் போட்டியில் மதியபோசன இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையில் உள்ளது.

இலங்கை அணி சார்பில் இதுவரை இரண்டு வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை எட்டியுள்ளனர். அதிலும் 13 ஓட்டங்களைப் பெற்ற குமார் சங்கக்கார ஆட்டமிழந்த நிலையில் 26 ஓட்டங்களைப் பெற்றுள்ள ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காது உள்ளார். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்துள்ளனர்.

இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை இரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts