பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஜே.ஸ்ரீரங்காவுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவுவிழா நடைபெறவுள்ள நிலையில், அந்நிகழ்வுக்கு கலந்துகொள்ள வரும் ஸ்ரீரங்காவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
‘ரங்காவின் பிரசன்னத்தை எதிர்க்கும் யாழ். இந்து சமூகத்தை ஆதரிப்போம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப்பிரசுரத்தின் கீழ்ப் பகுதியில் யாழ்ப்பாணச் சமூகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சூழவுள்ள வீடுகளுக்குள் இந்த துண்டுப்பிரசுரங்கள் எறியப்பட்டுள்ளன. ரங்கா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
யாழ் இந்துக்கல்லூரி 125ம் ஆண்டு இறுதி விழாவை பழையமாணவர் சங்கம் புறக்கணித்தது
யாழ் இந்துக்கல்லூரியின் 125 வருட நிறைவும் ரங்காவின் பிரசன்னமும்!