யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டத்திற்காக சர்ச்சைக்குரிய ரங்கா அவர்கள் விழா இணைப்பாளராக நியமிக்கப்பட்டு ரங்காவை முன்னிலைப்படுத்துவதால் பழையமாணவர்சங்கம் விழாவினை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வெளியிடப்பட இருந்த சிறப்பு மலரில் இணைப்பாளரின் வாழ்த்துச்செய்திகள் அடங்கிய பக்கங்கள் பழையமாணவர்களால் கிழித்தெறியப்பட்டு கல்லுாரி வீதி ஓரம் குப்பையில் வீசப்பட்டுள்ளது.முன்னதாக கல்வி யமைச்சர் கெலியில் வந்திறங்கி முத்திரை வௌியிட்டு விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் இந்தச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.