ரகுமான் மற்றும் ரஜினிக்கு அச்சுறுத்தல் – பொங்கியெழுந்த பிரகாஷ்ராஜ்

ரஜினி, திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க போகிறார் என்று வெளியான செய்தியை அடுத்து இந்து முன்னனி மற்றும் தமிழக பா.ஜ.க ஆகிய இரண்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

rajini-rahman-pirakash-raj

அதேபோல் முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் அறிவித்தார்.

இரண்டு மாபெரும் ஆளுமைகளுக்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தல், பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்நிலையில் இது பற்றி ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அந்த பேட்டியில் அவர் “ நாடு சகிப்புத்தன்மையற்ற நிலையை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது” என கூறியுள்ளார் ’அவர்களை நரகத்திற்கு போகட்டும்’ என கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் “ இறைச்சிக்கு தடை விதித்தீர்கள், வயது வந்தவர்களுக்கான படங்களுக்கு தடை விதித்தீர்கள்…ஓட்டு போடும் மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையா?…விரைவில் குமிழி வெடித்துவிடும்” என பொங்கியெழுந்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

Related Posts