ரகுமானுக்காக ஏ.ஆர்.ரஹ்மான்!!

குறும்பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய உள்ள படம் துருவங்கள் பதினாரு. இதில் ரகுமான் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்திருக்கிறார். படத்தில் மொத்தம் 16 கேரக்டர்கள், 16 மணிநேரத்தில் நடக்கிற கதை.

rahman

போலீஸ் அதிகாரியான ரகுமான் ஒரு போலீஸ் ஆபரேஷனில் இறங்கும்போது கால் ஊனமாகி ஓய்வில் இருக்கிறார். 5 வருடங்களுக்கு பிறகு அவர் விசாரித்த ஒரு வழக்கில் நிரபராதியை தவறுதலாக சிறைக்கு அனுப்பி விட்டதாக நினைக்கிறார். எனவே உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க மீண்டும் தனது புலன் விசாரணையை துவங்குகிறார். அந்த விசாரணை வளையத்துக்கள் வருகிற 16 பேரில் யார் நிஜ குற்றவாளி என்பதுதான் கதை.

இந்தப் படம் ரகுமானுக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். வில்லன், குணசித்திர நடிகர் என திசைமாறிய ரகுமான் மீண்டும் ஹீரோவாக வருகிறார்.

இதனால் இந்தப் படத்தின் புரமோசனில் மிகுந்த அக்கறை காட்டுகிறார். இதுவரை தனது மைத்துனர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் எந்த சிபாரிசுக்கும் போகாதவர் முதன் முறையாக துருவங்கள் 16 படத்தின் பாடல்களை வெளியிட அழைப்பு விடுத்துள்ளார்.

ரஹ்மானும் சம்மதித்துள்ளார். வருகிற 15ந் தேதி மாலை 4 மணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை வெளியிடுகிறார். இடம், வெளியீட்டு விபரங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.

Related Posts