யோஷிதவுக்கு மூவேளையும் வீட்டுச்சாப்பாடு

கார்ல்டன் விளையாட்டு நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட்டில், நிதி மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் வெலிக்கடை சிறைச்சாலையில், விளக்கமறியல் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவை உண்ணுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இதனால், அவர்களுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

இதனால், இந்த ஐவருக்கும் வீட்டிலிருந்து மூன்று வேளை உணவுகளை பெற்றுக்கொள்வதற்கான அனுமதி, திங்கட்கிழமையிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகளில் வழங்கப்படும் உணவுகளை உண்ண மறுத்தால், வெளியிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை உட்கொள்ளக்கூடிய சலுகை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதனாலேயே, தற்போது விளக்கமறியில் கைதிகளாக உள்ள இந்த ஐவருக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவை உட்கொள்வதற்கு முதலாம் நாள், அவர்கள் ஒத்துக்கொண்ட போதும், அதற்கு அடுத்த நாள், உண்ணுவதற்கு அவர்கள் மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts