யோஷிதவுக்கு எதிராக மேலும் 5 குற்றச்சாட்டுக்கள்!

பண மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்க மறியலில் இருக்கும் யோஷித உட்பட ஐவருக்கும் எதிராக மேலும் ஐந்து பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சி.எஸ்.என். தொலைக்காட்சி நிர்வாகம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே தற்போது யோஷித ராஜபக்‌ஷ கைதாகி உள்ளார்.

இவருக்கு எதிராக போலி ஆவணங்கள் தயாரித்தல், நம்பிக்கை மோசடி, பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை, சுங்க விதிகள் மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களே இப்போது அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.

இவை தொடர்பிலான குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரவித்துள்ளார்.

Related Posts