யேசுதாசுக்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பி!

சினிமாவில் அடி எடுத்து வைத்து 50வது ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, தன்னை அறிமுகம் செய்ய துணையாக இருந்த பாடகர் கேஜே.ஜேசுதாஸ்க்கு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாத பூஜை செய்தார்.

எம்ஜிஆர்., நடித்த அடிமைப்பெண் படத்தில் ‛ஆயிரம் நிலவே வா…’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானாவர் எஸ்.பி.பி.,. பின் முன்னணி பாடகராக உயர்ந்த எஸ்.பி.பி., தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட பல்வேறு மொழியில் 50,000க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்.

தற்போது தனது சினிமா பயணத்தின் 50வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறார் எஸ்பிபி. இதற்காக சென்னை, ஆர்கேவி., ஸ்டுடியோவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ் தன் மனைவியுடன் கலந்து கொண்டார்.

சினிமாவில் நுழையும் முன் மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்தவர் எஸ்.பி.பி., இவரின் திறமை கண்டு அவரை சினிமாவில் அறிமுகம் செய்ய துணையாக இருந்தவர் யேசுதாஸ். அதனால் யேசுதாசை கவுரவிக்க அவருக்கு பாத பூஜை செய்தார் எஸ்.பி.பி.

இந்நிகழ்ச்சியில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

முதன்முதலாக விஜயா கார்டனில் (ஆர்கேவி ஸ்டுடியோ) தன் முதல் பாடலை 50 ஆண்டுகளுன் முன் பாடினார். அதனால் தான், செண்டிமெண்டாக இந்த இடத்தை எஸ்.பி.பி., தேர்வு செய்துள்ளார்.

Related Posts