Ad Widget

யூதக்குடியேற்றத்தையும் விஞ்சிவிட்டது – சிவாஜிலிங்கம்

இஸ்ரேலின் யூத குடியேற்றத்தை மிஞ்சிய வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார்.

2

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்தக் கோரியும், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் நிலஅபகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்.

இராணுவ முகாம்களை அமைப்பதற்கும், இராணுவக் குடும்பங்களை குடியமர்த்துவதற்காகவும் வடமாகாணத்தின் வலி.வடக்கு, கோப்பாப்பிலவு போன்ற பகுதிகளில் பெருமளவு காணிகள் இராணுவம் சுவீகரித்து வைத்துள்ளது.

அதேபோன்று, கிழக்கிலே கடற்படையினரின் குடும்பங்களை குடியமர்த்துவதற்காக சம்பூர் போன்ற பகுதிகளில் பெருமளவான காணிகளைச் சுவீகரிக்கப்பட்டுள்ளது

இந்த நில ஆக்கிரமிப்புக்களுக்காக நாம் தொடர்ந்து போராட வேண்டும். சர்வதேச ரீதியிலும் எமது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எங்கள் நிலம் எங்கள் கையில் இல்லை. இதற்கு எதிராக நாம் எமது போராட்டங்களை முன்னெடுத்து சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை அரசாங்கத்தின் போலி முகத்திரையை கிழித்து எறியவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய நிலங்களை மாத்திரம் அல்ல அவர்களது நினைவு தினங்களையும் இராணுவம் அபகரிக்கிறது

Related Posts