யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்தாக ஏ.ஆர். ரகுமான் காரணமா?

ஏ.ஆர்.ரகுமானின் நெஞ்சே எழு இசை நிகழ்ச்சியால் தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் வாய்ஸ் ஆப் யுவன் நிகழ்ச்சி தள்ளிப் போயிருக்கிறது.

yuvan-raja

சென்னை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நெஞ்சே எழு என்கின்ற இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார்.

கடந்த 16 ம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அடுத்ததாக வருகின்ற 23 ம் தேதி கோவையில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் நெஞ்சே எழு காரணமாக யுவனின் ‘வாய்ஸ் ஆப் யுவன்’ இசை நிகழ்ச்சி தற்போது தள்ளிப் போயிருக்கிறது.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “யார்ஸ் மீடியா நெட்வொர்க் என்கின்ற எங்களது நிறுவனம் மூலமாக யுவன் ஷங்கர் ராஜாவின் வாய்ஸ் ஆப் யுவன் இசை நிகழ்ச்சியை வருகின்ற 23ம் தேதி கோவையிலும், 26 ம் தேதி மதுரையிலும் நடத்தத் திட்டமிட்டு இருந்தோம்.

ஆனால் 23 ம் தேதி ரகுமானின் நெஞ்சே எழு நிகழ்ச்சி கோவை நகரில் நடைபெறுகிறது. இதனால் யுவனின் இசை நிகழ்ச்சியை நாங்கள் தள்ளிவைக்கிறோம். மேலும் எதிர்பாராமல் நடந்த இந்த செயலுக்காக நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

விரைவில் வாய்ஸ் ஆப் யுவன் இசை நிகழ்ச்சியின் புதிய தேதிகளை நாங்கள் வெளியிடுவோம். நீங்கள் ஏற்கனவே டிக்கெட் வாங்கியிருந்தால் அதற்குரிய பணம் விரைவாக உங்களுக்கு திருப்பி அளிக்கப்படும்” என்று தெரிவித்து இருக்கின்றனர்.

Related Posts