யுவதி ஒருவரை இளைஞர்கள் இருவர் தாக்கும் காணொளி – வௌியானது உண்மைகள்

இரண்டு இளைஞர்கள் யுவதி ஒருவரை தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வௌியாகி பெரும் பரபரப்பை ஏற்படித்தியிருந்தது.

facebook-girl-fight

இந்தக் காணொளியோடு சம்பந்தப்பட்ட யுவதி மற்றும் அந்த இளைுர்கள் இருவரும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு நேற்று சென்று நடந்தவற்றைக் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 2014ம் நவம்பர் மாதம் 15ம் திகதி பகல் 1 மணியளவில் இடம்பெற்ற சம்வம் என்று அவர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது இருவரும் காதலித்து வந்ததாகவும் தற்பொழுது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அந்த காட்சியை படம் பிடித்த தனது நண்பரான சாமரவின் தொலைபேசியை திருத்துவதற்காக கடையொன்றிற்கு கொடுத்தவேளை அந்த காட்சிகள் வௌியிடப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts