யுவதியின் பொறுப்பற்ற செயல் – மூன்று குடும்பம் தனிமைப்படுத்தலில்!!

சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி செயற்பட்ட யுவதியினால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பகுதியை சேர்ந்த யுவதியொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதுளைக்கு சென்று திரும்பியுள்ளார். அதனால் அவரை அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தி இருந்தனர்.

அந்நிலையில் யுவதி அறிவுறுத்தல்களை மீறி நேற்று முன்தினம் முச்சக்கர வண்டியில் உறவினர் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் , அது தொடர்பிலான தகவல்களை அறிந்து கொண்ட சுகாதார பிரிவினர் , யுவதியின் குடும்பத்தினர் , முச்சக்கர வண்டி சாரதியின் குடும்பத்தினர் , யுவதி சென்ற உறவினர் குடும்பம் ஆகிய மூன்று குடும்பங்களை சேர்ந்த 7 பேரை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

Related Posts