மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை மகிழ்ச்சியைத் தந்தாலும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் கவலையளிக்கின்றன.
பத்தரமுல்லையில் நாடாளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள படைவீரர்களின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு உரையாற்றுகையில்,
மூன்று தசாப்த காலமாக தொடர்ந்த போர் முடிவுக்குக் கொண்டுவந்தமை மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆனால் இந்தப் போரில் கொல்லப்பட்ட ஒரு இலட்சம் உயிர்கள் கவலையைத் தருகின்றது.
20ஆம் நூற்றாண்டிலிருந்து நமது நாட்டில் இன முரண்பாடு நடைபெற்று வருகின்றது. அதனை நாம் தீர்க்கவேண்டும்.
அரசாங்கம் இராணுவத்தை வேட்டையாடுவதாகக் கூறுகின்றனர். ஆனால் அவர்களின் காலத்திலேயே போரை வெற்றிகொண்ட இராணுவத் தளபதியை சிறையில் அடைத்தார்கள்.
யார் என்ன செய்தாலும் நல்லிணக்கத்துக்கான எமது பயணம் தொடரும். யாரும் எம்மைத் தடைசெய்யவியலாது எனத் தெரிவித்தார்.