யுத்த வெற்றியின் 75% எனக்கே சொந்தம் – சந்திரிகா

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் 75 சதவீதத்தை நானே வெற்றிகொண்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

chandrika_bandaranayake

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற, எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘இந்த யுத்தத்தை நடத்தியதும் அதில் வெற்றிகொண்டதும் சரத் பொன்சேகாவே. யுத்தத்தின் 75 சதவீதமானவை எங்களது, அரசாங்கத்தின்போதே வெற்றிகொள்ளப்பட்டது. நாம் விட்டுவைத்த 25 சதவீதத்தையே ராஜபக்ஷவின் அரசாங்கம் வெற்றிகண்டது.

இருப்பினும், யுத்தம் முடியும் போது, நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேனவே’ என சந்திரிகா குமாரதுங்க மேலும் கூறியுள்ளார்.

Related Posts