வன்முறைச் சம்பவங்களின் போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதை எதிர்க்கும் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கட்டாயம் கைச்சாத்திட வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பெரும்பான்மையான உலக நாடுகள் யுத்தத்தின் போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதை எதிரத்து வருகின்றன.
எனினும் இலங்கை இதுவரை யுத்த வலயத்தில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதை எதிர்க்கும் பிரகடனத்தில் கைச்சாத்திடவில்லை.
எனவே இலங்கை இப் பிரகடணத்தில் கட்டாயம் கைச்சாத்திட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.