யுத்த நிறைவின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை : சுரேஸ்

யுத்த நிறைவின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்றைய தினம் நடத்திய மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்கு மக்களின் எவ்வித பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் காணாமல் போனவர்களின் பிரச்சினைகள், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பது குறித்த பிரச்சினைகள் போன்றவற்றுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் சுதந்திரமான முறையில் மே தினக் கூட்டங்களை நடத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts